தமிழகத்தில் அதிர்ச்சி... கோவிலுக்கு தானமாக வழங்கிய காளை, கன்றுக்குட்டியை கூறு போட்ட கொடூரம்!
சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட காளை மாடும் கன்றுக்குட்டியும் திருடிச் சென்று கூறு போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு எதிராக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுமாட்டை ஒரு வெளிமத நபர் திருடிச் சென்று வெட்டி கூறு போட்டது திகிலூட்டும் செயல். மத அமைதியை குலைக்கும் வகையில் இத்தகைய செயல்கள் நடப்பது கவலையளிக்கிறது.

அந்த நபர் தொடர்ந்து கோவிலுக்குள் வந்து மாட்டை கவனித்து, உணவளிப்பது போல நடித்து வேவு பார்த்து பின்னர் அதை திருடிச் சென்றுள்ளார். தானம் வழங்கிய பக்தர் கோவிலுக்கு வந்து பார்த்த போது தான் மாடு காணாமல் போனது தெரிய வந்துள்ளது. அவர் புகாரளித்ததன் பின்னரே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அறநிலையத்துறை கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆனால் தானமாக வழங்கப்பட்ட மாடு காணாமல் போனதும் அறநிலையத் துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது அலட்சியம் மட்டுமல்ல, உடந்தையாக இருந்தார்களா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

கோவில் சொத்துக்களை பாதுகாப்பதில் இவ்வளவு அலட்சியம் காட்டும் அறநிலையத்துறை இந்து கோவில்களுக்கு தேவையா என மக்கள் சிந்திக்க வேண்டும்,” என்று அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் சேலம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
