தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி.. காதலிக்க மறுத்ததால் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றிய இளைஞர்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம், அண்ணாநகரில் சிறுமி பலாத்காரம், கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே விதவை பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது 19 வயது இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை யானைகவுனி பகுதியில் 19 வயது இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்தி பெட்ரோல் ஊற்றி கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அர்ஜூன் (20), ஜேம்ஸ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், இங்கு பெண்கள், குழந்தைகள் உட்பட யாருக்கும் பாதுகாப்பில்லை என்றும் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!