கல்லூரி விடுதியில் அதிர்ச்சி.. ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்து விற்பனை.. வசமாக சிக்கிய மாணவர்!

 
லேடீஸ் ஹாஸ்டல் ரகசிய கேமிரா செல்போன் குளியலறை வீடியோ பாத்ரூம்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியின் கழிவறையில் ரகசிய கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்கள் சிலர் கல்லூரி நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தை கண்டித்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் வீடியோ

மேலும், இச்சம்பவம் தொடர்பாக மாணவர்களிடம் கிடைத்த தகவலின் பேரில், கேமரா பொருத்திய அதே கல்லூரியில் படிக்கும் பி.டெக் மாணவர் ஒருவர், அவர் தங்கியிருந்த விடுதி அறைக்குச் சென்று தாக்கி, செல்போன் மற்றும் மடிக்கணினியை பறித்துச் சென்றார்.  பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,  அந்த மாணவனை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

போலீஸ்

இறுதியாண்டு படிக்கும் இவர், பெண்கள் குளிக்கும் காட்சிகளை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்து வெளிநாட்டு இணையதளங்களுக்கு விற்பனை செய்தது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு மாணவர் மற்றும் அவரது பெண் தோழியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதாக ஒரு வாரத்துக்கு முன்பே கல்லூரி நிர்வாகத்துக்கு புகார் வந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்காததற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web