அதிகாலையில் அதிர்ச்சி... விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
இன்று அதிகாலையிலேயே சென்னையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தொடர்பு கொண்டு, நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்ததாக தகவல் தெரிவித்தார். இதன்பிறகு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் காவல்துறையினர் அதிகாலையிலேயே வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை; மிரட்டல் வெறும் புரளி என அதிகாரிகள் தெரிவித்தனர். விடுத்த மர்ம நபரை கண்டுபிடிக்க காவல்துறையினர் விசாரணை தீவிரமாக நடத்தியுவருகின்றனர். கடந்த வாரம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகை திரிஷா உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
