காலையிலேயே அதிர்ச்சி... தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது. நேற்று (நவம்பர் 2) ஒரு சவரன் தங்கம் ரூ.90,480க்கு விற்பனையாகிய நிலையில், இன்று ரூ.320 உயர்ந்து ரூ.90,800 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.11,310 இருந்தது. இன்று அது ரூ.40 உயர்ந்து ரூ.11,350 ஆக விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு சந்தையிலும் தங்க விலை உயர்வை கண்டுள்ளது. இதனால் நகை வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் கவனத்துடன் செயல்படுகின்றனர்.

தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்க விலை, திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களிடையே சற்றே கவலைக்குரிய நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
