காலையிலேயே அதிர்ச்சி... பள்ளியில் துப்பாக்கிச்சூடு.. 10 பேர் துடிதுடித்து பலியான சோகம்!

 
ஸ்வீடன்

ஸ்வீடன் நாட்டில், அந்நாட்டின் தலைநகரான ஸ்டாக் ஹோம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாக் ஹோமில் பகுதியில் உள்ள ஒரிபுரோவில் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் திடீரென ஒரு நபர் கண்மூடித்தனமான  துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு இது தொடர்பாக விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்வீடன்

போலீசாரின் விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனியாகச் செயல்பட்டிருக்கலாம் என்றும், தற்போது பயங்கரவாதம் தான் இதற்குக் காரணம் என்று சந்தேகிக்கவில்லை என்றும் போலீசார் நம்புகின்றனர்.

இது குறித்து ஸ்வீடன் பிரதமர் கிறிஸ்டர்சன் தனது எக்ஸ் தளத்தில், 'இது அனைவருக்கும் வேதனையான நாள். என் எண்ணங்கள் முழுவதும் சாதாரண பள்ளி நாள் பங்கரவாத நாளாக மாறியதை பற்றியே இருக்கிறது. உயிருக்கு பயந்து வகுப்பறையில் சிக்கிக் கொள்ளும் கொடூரத்தை யாரும் தாங்கிக் கொள்ள முடியாது' எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்வீடன்

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு யாரோ ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்து அனைவரையும் வெளியே செல்லுமாறு கூச்சலிட்டதாக பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த ஆசிரியர்ர் கூறுகையில், 'நான் என்னுடைய 15 மாணவர்களையும் அழைத்துக்கொண்டு நடைபாதைக்குள் சென்றேன், நாங்கள் ஓட ஆரம்பித்தோம். பின்னர் இரண்டு துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. ஆனால் நாங்கள் தப்பித்தோம். நாங்கள் பள்ளி நுழைவாயிலுக்கு அருகில் இருந்தோம்' எனத் தெரிவித்தார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web