தூத்துக்குடியில் அதிர்ச்சி... பட்டப்பகலில் இளம்பெண்ணைக் கடத்திச் சென்ற மீன் வியாபாரி!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பைக்கில் கடத்திச் சென்றதாக மீன் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளை பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இளம்பெண் கடந்த 15ஆம் தேதி இரவு உரக்கடை பகுதியில் தனியாக நின்றிருந்தாராம். அப்போது, அவ்வழியே வந்த ஏ.பி. முதலூரைச் சேர்ந்த மீன் வியாபாரியான ஜெயபால் (51) என்பவர், அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுத்தபடி தனது பைக்கில் ஏற்றிக்கொண்டாராம்.
அங்கிருந்தோர் தடுத்ததையும் மீறி அவரை ஜெயபால் கடத்திச் சென்றாராம். இதுகுறித்து அப்பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா வழக்குப் பதிந்து, ஏ.பி. முதலூரில் பதுங்கியிருந்த ஜெயபாலை கைது செய்தனர். இளம்பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!