அதிர்ச்சி... 8 வயசு தான் ஆகுது... வகுப்பறையில் சுருண்டு விழுந்து மாரடைப்பால் மரணம்!

 
தேஜஸ்வினி

சமீப காலங்களாக இளைய தலைமுறையினர் அதிகம் மாரடைப்பால் மரணித்து வருகின்றனர். இதற்கு உணவு பழக்கம்  ஒரு காரணமாக கூறப்பட்டாலும், மாரடைப்பால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விளையாடிக் கொண்டிருக்கும் போது மரணம், நடனமாடிக் கொண்டிருக்கும் போது மரணம் என்று அதிர்ச்சியளிக்கிறது. இந்நிலையில்  8 வயது குழந்தை ஒன்று பள்ளி வகுப்பறையில் சுருண்டு விழுந்து மாரடைப்பால் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் தாலுகாவில் உள்ள பாடனகுப்பே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லிங்கராஜு. இவரது மனைவி ஸ்ருதி. இந்த தம்பதியருக்கு தேஜஸ்வினி என்று 8 வயதில் ஒரு மகள்.

மாரடைப்பு

தேஜஸ்வினி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். படிப்பில் ஆர்வத்துடன் இருக்கும் தேஜஸ்வினி, வழக்கம் போல நேற்று பள்ளிக்கு சென்றார். வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்களிடம் வீட்டுப் பாடங்களை காண்பிக்கும்படி ஆசிரியை கேட்டார்.

அப்போது, தேஜஸ்வினி திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். மேலும், சுயநினைவின்றி சிறுநீரும் கழித்து விட்டார். இதை பார்த்து ஆசிரியையும், சக மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, சிறுமியை அருகில் உள்ள ஜே.எஸ்.எஸ்., மருத்துவமனைக்கு பள்ளி நிர்வாகத்தினர் துாக்கிச் சென்றனர். சிறுமியை சோதனை செய்த டாக்டர்கள், 'சிறுமி திடீர் மாரடைப்பால் இறந்து விட்டார்' என கூறினர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இது குறித்து தகவலறிந்து ஓடோடி வந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். 8 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகே மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web