அதிர்ச்சி... 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடு பிடி வீரர் கார்த்திக் தகுதி நீக்கம்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் இதனை முன்னிட்டு பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் அருகே உள்ள ஜல்லிக்கட்டு திடலில் நடைபெற்ற போட்டியில் 1,100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில், கடந்த ஆண்டு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்தார் வீரர் கார்த்திக் இந்த ஆண்டும் களத்தில் இறங்கி விளையாடத் தொடங்கினார். நேற்று 4 சுற்றுகள் முடிந்தபோதே 8 காளைகளை அடக்கி முன்னிலை பெற்றிருந்தார். ஆனால் அவரால் இந்த முறை வெற்றிபெற முடியவில்லை.
நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் முதல் பரிசான 8 லட்சம் மதிப்புக்கொண்ட காரை வென்றார். அடுத்த இடத்தில் குன்னத்தூரைச் சேர்ந்த அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி 2 வது இடத்தை பிடித்தார். இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் விளையாடிய வீரர் கார்த்திக் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏனெனில் அவனியாபுரம் போட்டியில் கலந்து கொண்டு விளையாடியது மட்டுமின்றி அலங்காநல்லூர் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டிலும் கலந்து கொண்ட நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படி, ஏற்கனவே ஒரு போட்டியில் களம் கண்ட வீரர் மற்றோரு போட்டியில் கலந்து கொண்டு விளையாடக் கூடாது. எனவே, அந்த விதிமுறையை கார்த்திக் மீறிய காரணத்தால் அவரை தகுதிநீக்கம் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!