அதிர்ச்சி... காதலன் தீ வைத்ததில் கென்ய ஒலிம்பிக் வீராங்கனை ரெபெக்கா மரணம்!

 
ன் ரெபெக்கா செப்டேஜி

கென்யாவின் ஒலிம்பிக் வீராங்கனை ரெபெக்கா செப்டேஜி (33) காதலன் தீ வைத்து ஏரித்ததில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். 

கடந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொலைதூர ஓட்டத்தில் ரெபெக்கா செப்டேஜி கலந்து கொண்டு 44வது இடத்தைப் பிடித்தார். இவரது காதலன் டிக்சன் என்டிமா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரெபெக்கா, டிரான்ஸ் நசோயாவில், தடகள பயிற்சி மையத்திற்கு அருகில் உள்ள  பகுதியில் ஒரு நிலத்தை வாங்கினார். இதனால், ரெபெக்காவுக்கும் அவரது காதலனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு தீவிரமடைந்ததால் கடந்த செப்டம்பர் 1ம் தேதி, பெட்ரோல் வாங்கி  டிக்சன் ரெபெக்கா மீது ஊற்றி தீ வைத்து கொல்ல முயன்றார். இதனால், ரெபேக்காவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. மேலும், காதலன் டிக்சனும் படுகாயம் அடைந்தார்.

தீ விபத்து

இருவரும் எல்டோரெட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ரெபெக்காவுக்கு 75% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் ரெபேக்கா பரிதாபமாக உயிரிழந்தார்.

கென்யாவில் பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2022ல் கென்யாவில் பிறந்த பஹ்ரைன் தடகள வீராங்கனை டமரிஸ் முத்திக்கும் இதே போன்ற சம்பவம் நடந்தது. அவர் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். அதன் பின்னர் 2023ல் உகாண்டா ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் பெஞ்சமின் கிப்லாகாட் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web