அதிர்ச்சி... அரசு மருத்துவமனையில் ஒழுகும் குளுக்கோஸ் பாட்டில்கள்... மருத்துவர்களின் அலட்சியம்!

 
விளாத்திகுளம் மருத்துவமனையில் அலட்சியம்

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் பாட்டில்கள் ஒழுகுவதாகவும், இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணிக்கு வருவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்தனைக்கும் கனிமொழி எம்.பி.யின் தொகுதியிலேயே இந்த அலட்சியப் போக்கு அரங்கேறி வருகிறது.  

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்ற முதியவர், தனது மனைவி பார்வதிக்கு(61) மிகவும் உடல்நிலை சரியில்லாத நிலையில் கடந்த செப்டம்பர் 24ம் தேதி காலை 7 மணியளவில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். 

இதனைத் தொடர்ந்து இரத்த சர்க்கரை குறைவு மற்றும் வயிற்றுப்போக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டி பார்வதிக்கு தற்போது வரை D5 (DEXTROSE 5%) எனும் குளுக்கோஸ் பாட்டில்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறு மூதாட்டிக்கு செலுத்தப்பட்டு கொண்டிருக்கும் குளுக்கோஸ் பாட்டிலில் Drips உடலுக்கு செல்வதை விட பெருமளவு பாட்டிலிருந்து ஒழுகி வீணாகும் மிக மோசமான நிலையில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குளுக்கோஸ் பாட்டிலில் இருந்து ஒழுகும் நீரை தரையில் சிந்தாதவாறு சேகரிப்பதற்கென்று மருத்துவமனையில் இருந்த குளிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கோப்பையை குளுக்கோஸ் பாட்டிலுக்கு கீழே வைத்துள்ளனர். 

மருத்துவர்

நோயாளிக்கு செலுத்தப்படும் குளுக்கோஸில் பெருமளவு வீணாவதை கண்ட நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து செவிலிர்களிடம் கேட்டதற்கு, பாட்டில்கள் எல்லாமே கம்ப்ளைன்ட் தான் அப்படித்தான் ஒழுகும் என்று அதிகார தோணியில் அலட்சியமாக பதில் கூறியதாக புகார் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட நோயாளி பார்வதியின் உறவினர்கள். அதுமட்டுமின்றி, ஏன் குளுக்கோஸ் பாட்டில் ஒழுகுது? என்று கேட்டதற்கு உடனடியாக எங்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்கிறீர்களா? என்று நிர்பந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. 

குறிப்பாக, விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லை என்பதும், அதிலும் இரவு நேரங்களில் பணி மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வருவதே இல்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து இருந்து வருகிறது. அதேபோன்றும் தற்போதும் இங்குள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாத நிலை தான் உள்ளது. 

தூத்துக்குடி

இதில் மிக முக்கியமாக நோயாளிக்கு சிகிச்சையளிக்க செலுத்தப்படும் குளுக்கோசிலும் இவ்வளவு அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீதும், இரவுநேர பணிக்கு வராத பணி மருத்துவர் மீதும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், விளாத்திகுளத்தை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏழை கிராம மக்களுக்கு சிகிச்சை பெறக்கக்கூடிய ஒரே இடமாக விளங்கும் இந்த விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் தலைமை அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்களை நியமிப்பதோடு, இங்கு வரும் நோயாளிகளுக்கு தரமான உரிய சிகிச்சைகள் கிடைப்பதை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web