அதிர்ச்சி.. சத்துணவில் பல்லி... 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்... தர்மபுரியில் பதற்றம்!

தர்மபுரி மாவட்டம் அரூர் அரசுப் பள்ளியில் மதியம் சத்துணவு சாப்பிட்ட மாணவிகளில் 8 மாணவிகளுக்கு திடீரென தொடர்ந்து வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த விசாரணையில் அரசு பள்ளியின் சத்துணவில் பல்லி ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. அதிகாரிகள் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 915 மாணவிகள் தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் சுமார் 340 மாணவிகளுக்கு மதியஉணவு தயார் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. இதில் சத்துணவு சாப்பிட்டவர்கள் 8 மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மாணவிகள் மீட்கப்பட்டு அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 6 மாணவிகள் வீடு திரும்பிய நிலையில், கனிஷ்கா, சந்தியா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாலையில் இவர்களும் வீடு திரும்பினர்.
தகவலறிந்த அரூர் கோட்டாட்சியர் சின்னுசாமி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை செய்தார். சத்துணவில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக உணவு மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அதிகாரிகள் விசாரணைக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவிகளை கோட்டாட்சியர் மற்றும் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் ஆகியோர் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!