ஷாக்.. அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தில் மெகா மோசடி.. சிக்கிய 1500 அதிகாரிகள்!
கேரளாவில் அரசு வழங்கும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை முறைகேடாக பெற்று அரசு அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள் உள்பட 1500 பேர் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு மாத ஓய்வூதியமாக ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட சமூகத்தின் நலிந்த பிரிவைச் சேர்ந்த 62 லட்சம் பேருக்கு ரூ.1,600 வழங்கப்படுகிறது.
இந்த ஓய்வூதியத்தை பல மாதங்களாக 1,500 அரசு ஊழியர்கள் சட்டவிரோதமாக பெற்று வருவது தற்போது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாநில நிதி அமைச்சர் பாலகோபால் உத்தரவிட்டுள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மாநிலத்தில் 1,458 அரசு ஊழியர்கள் அரசின் சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை முறைகேடாக பெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயர்நிலை ஆசிரியர்கள், கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை பெற்று வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!