ஷாக்.. பாஜக அலுவலக லிப்டில் சிக்கிக்கொண்ட அமைச்சர்!
ஹரியானா மாநில விவசாய அமைச்சர் ஷியாம் சிங் ராணா, பஞ்ச்குலாவில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு, மாநில சட்டசபையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். பா.ஜ., அலுவலகத்தில் உள்ள லிப்டை பயன்படுத்திய போது, திடீரென லிப்ட் பாதி வழியில் பழுதடைந்து நடுவில் சிக்கினார். அமைச்சருடன் நல்வா எம்எல்ஏ ரந்தீர் பனிஹார் உட்பட பலர் உடன் சென்றனர்.
அவர்களும் லிப்டில் சிக்கியதாக தகவல் வேகமாக பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் லிப்டில் சிக்கிய அமைச்சர் ஷியாம் சிங் ராணா உள்ளிட்டோருக்கு தண்ணீர் வழங்கினர். சுமார் அரை மணி நேர தீவிர முயற்சிக்கு பிறகு அமைச்சர் உள்ளிட்டோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். லிப்டில் அமைச்சர் சிக்கியதால், லிப்ட் பணிகள் முழுவதும் நிறுத்தப்பட்டது. லிப்ட் சரி செய்யப்பட்ட பிறகே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என பலகை வைக்கப்பட்டது.
லிப்டில் அமைச்சர் சிக்கியதால், லிப்ட் பராமரிப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, லிப்ட் எப்படி நடுவழியில் நின்றது, அது சரியாகப் பராமரிக்கப்படவில்லை? பெரிய விபத்து நடந்தால் யார் பொறுப்பு? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. 2022ம் ஆண்டு திறக்கப்பட்ட புதிய பாஜக அலுவலகத்தில் லிப்ட் பழுதடைந்த விவகாரம் மாநில பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!