அதிர்ச்சி... 400க்கும் மேலான ஆபாச வீடியோக்கள்... பல பெண்களுடன் உல்லாசம்... அரசு அதிகாரியின் அதிர வைக்கும் லீலை!

 
பால்டசர்

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடோரியல் கினியாவைச் சேர்ந்த பால்டசர் எங்கோங்கா எனும் அரசு உயரதிகாரியின் 400க்கும் மேற்பட்ட பெண்களுடனான ஆபாச வீடியோக்கள் வெளியாகி அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பால்டசர் பல பெண்களுடன் உடலுறவு கொள்ளும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஈக்வடோரியல் கினியா நாட்டின் தேசிய நிதி விசாரணை முகமையின் இயக்குநராக பணிபுரிந்து வந்தார் பால்டசர்.  54 வயதான இவர் பல பெண்களுடன் உடலுறவு கொள்ளும் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல பெண்களுடன் தன்னுடைய நிதித்துறை அலுவலகத்திலும் வேறு சில இடங்களிலும் என 400க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் வெளியான நிலையில், இந்த வீடியோக்களில் பல முக்கிய உயரதிகாரிகளின் மனைவிகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

பால்டசர்

பால்டசர் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கடந்த அக்டோபர் 25ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரை மலபோ சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவரது செல்போன்களும், கணினிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.  அவற்றில் இருந்து இவை வெளியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து பால்டசரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web