ஷாக்.. துணை முதல்வரை பார்க்க நிர்வாணமாக வந்த பெண் அகோரி!
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது அகோரி பெண். இவர் உடல் முழுவதும் திருநீரை பூசி, உத்தராக்ஷ மாலைகளை அணிந்து, கையில் திரிசூலத்தை ஏந்தியபடி நிர்வாண நிலையில் பல கோயில்களுக்குச் செல்கிறார். தான் செல்லும் இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறி வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணை சந்திக்க விஜயவாடா - ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மங்களகிரி அருகே உள்ள ஜனசேனா கட்சி அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் போலீசார் நிர்வாண அகோரி பெண்ணை தடுத்து நிறுத்தினர். இதனால், அகோரி பெண் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று அகோரி பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை அவர் ஏற்காததால், போலீசார் ஜீப்பில் ஏற்றி செல்ல முயன்றனர்.
ஆனால், அகோரி பெண் போலீசாரை தாக்கிவிட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து, பெண் போலீசார், அவரது கை, கால்களை கட்டி, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி பவன் கல்யாணை சந்திக்க அந்த பெண் வந்தது தெரியவந்தது. போலீசார் அவரை சமாதானம் செய்து சிறிது நேரத்தில் விடுவித்தனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!