அதிர்ச்சி.. சம்பளம் தராமல் இழுத்தடிப்பு.. ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளர்கள்!

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தாரமங்கலம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில வாரங்களுக்கு முன், விழுப்புரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சொக்கநாதன் அவர்களை தொடர்பு கொண்டு, மேலகொண்டை கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் கிணறு தோண்டும் பணி மேற்கொள்ள வேண்டும் என கூறினார். கிணறு தோண்டுவதற்கு கனஅடிக்கு ரூ.40 என்றும் பேசினார். அதற்கு தொழிலாளர்களும் சம்மதித்தனர். அதன்படி கடந்த 20ம் தேதி முதல் இவருக்கு சொந்தமான இடத்தில் சுமார் 50 தொழிலாளர்கள் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு வாரத்தில் பணி முடிந்து 91,532 கன அடி கூலி வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதை வழங்க ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் மறுத்துள்ளார். பின்னர் கடந்த 27ம் தேதி விழுப்புரம் உட்கோட்டா காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பின் பொதுப்பணித்துறையினர் கிணற்றை அளந்து அதன் அறிக்கையை போலீசில் கொடுத்தனர். ஆனால், அந்த தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை விரைந்து வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் பாபு மனைவி புஷ்பாஞ்சலி (35), மாரி மனைவி லட்சுமி (55) உள்பட 6 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியை பறித்து சென்றனர். பின்னர் முன்னெச்சரிக்கையாக தண்ணீர் ஊற்றினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சொந்தமான நிலத்தில் கிணறு தோண்டுவதற்கான நிலுவைத் தொகையை வழங்குமாறு கேட்டபோது, அவர் தர மறுத்து ஆணவமாகவும், அதிகார பூர்வமாகவும் பேசுகிறார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிகாரத்தையும் அரசியலையும் துஷ்பிரயோகம் செய்து விசாரணையை தாமதப்படுத்துகிறார். இதனால் உணவு கிடைக்காமல் குழந்தைகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு வரவேண்டிய தொகை கிடைக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர். இதை கேட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!