ஷாக்.. மால் திறந்த அரைமணி நேரத்தில் மொத்த பொருட்களை சூறையாடிய 1 லட்சம் மக்கள்!

 
பாகிஸ்தான் மால்

பாகிஸ்தானில் உள்ள ஒரு மால் திறப்பு விழாவில் ஒரு லட்சம் மக்கள் கூட்டம் கூடி அரை மணி நேரத்தில் ஒரு பொருளையும் விட்டு வைக்காமல் கொள்ளையடித்தது. கராச்சியில் புதிய 'ட்ரீம் பஜார்' மால் திறப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை விளம்பரப்படுத்தப்பட்டது. இந்திய மதிப்பில், பொருட்களின் ஆரம்ப விலை ரூ. 15க்கு விற்பதாக விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில், தொடக்க நாளில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அரை மணி நேரத்தில் அனைத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.


மாலை 3 மணிக்கு வணிக வளாகம் திறக்கப்பட்டவுடன், மக்கள் கடைக்குள் விரைந்தனர். இதனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்புப் படையினர் கதவுகளை அடைத்தனர். எனினும், அங்கிருந்த வணிக வளாகத்தின் கண்ணாடிகளை உடைத்து அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் மக்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அரை மணி நேரத்தில், மக்கள் கடை முழுவதையும் சூறையாடினர் மற்றும் கடையின் மற்ற பொருட்களை சேதப்படுத்தினர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், மால் உரிமையாளர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை உதவிக்கு அழைத்தனர், ஆனால் அவர்கள் வருவதற்குள், மக்கள் கடையை சூறையாடினர். பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட, வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலதிபர் ஒருவர் குறைந்த விலையில் பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்காக இந்த வணிக வளாகத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web