பாகிஸ்தானில் கொடூரம்... ஆஃபர் அறிவித்து புதிதாய் திறக்கப்பட்ட 3 அடுக்குமாடி ஷாப்பிங் மால்... 30 நிமிஷத்துல மொத்த பொருட்களையும் சூறையாடிய பொதுமக்கள்!

 
பாகிஸ்தான் மால்

“இதுக்காக தாண்டா இந்த ஊருல எவனுமே கடை திறக்க வர மாட்டேங்குறாங்க” என்று கதறிக் கொண்டிருக்கிறார் அந்த தொழிலதிபர். தன்னுடைய மன குமுறலை அறிக்கையாகவும் வெளியிட்டிருக்கிறார். அதள பாதாளத்திற்கு சரிந்துள்ள பாகிஸ்தானின் நிதி நிலைமையால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. குறிப்பாக கராச்சி மக்கள் ரொம்பவே கஷ்டப்படுறாங்க.  இந்நிலையில், கராச்சி மக்களின் துயர் துடைக்கும் யோசனையில் அதிரடி ஆஃபர்களை அறிவித்து புதிதாக ஒரு மால் திறக்க முடிவெடுத்திருந்தார் தொழிலதிபர் ஒருவர். எல்லாமே ரொம்பவும் விலை குறைவு. திறப்பு விழாவில் ஒரு லட்சம் பேர் திரண்டிருந்தனர். கடையைத் திறந்ததும் வாங்குவதற்கு அத்தனை ஆர்வமாய் மக்கள் கூட்டம் கூடியது. 

அடுத்த காத்திருந்தது அதிர்ச்சி. கடையைத் திறந்த அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு பொருளையும் விட்டு வைக்காமல் திரண்டிருந்த 1 லட்சம் பேரும் கடைக்குள் திபுதிபுவென புகுந்து கைகளில் அகப்பட்டதை எல்லாம் எடுத்துக் கொண்டு வேகமாக கடையில் இருந்து வெளியேறினார்கள்.

கராச்சியில் புதிய 'ட்ரீம் பஜார்' மால் திறப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை விளம்பரப்படுத்தப்பட்டது. இந்திய மதிப்பில், பொருட்களின் ஆரம்ப விலை ரூ.15க்கு விற்பதாக விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில், தொடக்க நாளில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அரை மணி நேரத்தில் அனைத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.



மாலை 3 மணிக்கு வணிக வளாகம் திறக்கப்பட்டவுடன், மக்கள் கடைக்குள் விரைந்தனர். இதனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்புப் படையினர் கதவுகளை அடைத்தனர். எனினும், அங்கிருந்த வணிக வளாகத்தின் கண்ணாடிகளை உடைத்து அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் மக்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அரை மணி நேரத்தில், மக்கள் கடை முழுவதையும் சூறையாடினர் மற்றும் கடையின் மற்ற பொருட்களை சேதப்படுத்தினர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், மால் உரிமையாளர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை உதவிக்கு அழைத்தனர், ஆனால் அவர்கள் வருவதற்குள், மக்கள் கடையை சூறையாடினர். பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட, வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலதிபர் ஒருவர் குறைந்த விலையில் பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்காக இந்த வணிக வளாகத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web