அதிர்ச்சி... வகுப்பறையில் பிரசவ வலியால் மயங்கி விழுந்த பிளஸ் 1 மாணவி... விடுமுறையில் விளையாடிய சித்தி பையன்!

 
 பிளஸ் 1 படிக்கும் மாணவி

பெரியம்மா மகளை, உறவு முறையில் தங்கை என்றும் பாராமல் சித்தி பையனே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி 11ம் வகுப்பு படித்து வரும் நிலையில், வகுப்பறையில் பிரசவ வலியால் மயங்கி விழுந்த நிலையில், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி நேற்று முன்தினம் வகுப்பறையில் அமர்ந்திருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர்.

பரபரப்பு! விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்! நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி!

தொடர் சிகிச்சையில் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மாணவி மற்றும் குழந்தை மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் சைல்டு லைன் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். புகாரின் பேரில், திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, மாணவியின் கர்ப்பத்துக்குக் காரணமான சாணார்புதூர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (எ) ரங்கராஜ் (28) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சாணார்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (எ) ரங்கராஜ் (28). கூலித்தொழிலாளியான இவரது பெரியம்மாவின் மகளான 16 வயது மாணவி கடந்த ஆண்டு ராசிபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் மாணவி சித்தி அங்காயி வீட்டில் படித்து வந்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தங்கராஜ் மாணவியிடம்  தகாத உறவில் ஈடுபட்டார். பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி கர்ப்பமானார்.

இதையறிந்த அவர் பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்க முயன்றார். ஆனால் மாத்திரை கிடைக்கவில்லை. இந்நிலையில் 10ம் வகுப்பு முடித்த மாணவி சில மாதங்களுக்கு முன் சொந்த ஊரான பள்ளிபாளையம் வந்துள்ளார். பின்னர் அங்குள்ள பெண்கள் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மாணவி நேற்று முன்தினம் வகுப்பறையில் பிரசவ வலியால் மயங்கி விழுந்தார். சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது ​​மாணவிக்கு அங்கேயே பெண் குழந்தை பிறந்தது. விசாரணைக்கு பின் தங்கராஜை கைது செய்துள்ளோம்” என்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web