அதிர்ச்சி... பள்ளி மாணவர்கள் மோதலில் தாக்கப்பட்ட பிளஸ்-2 மாணவர் மூளைச்சாவு!

 
மாணவன்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் பகுதியில், பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் கடுமையாகத் தாக்கப்பட்ட பிளஸ்-2 மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு (Brain Dead) அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானைச் சேர்ந்த கவியரசன் (17), கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் அறிஞர் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தப் பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு இடையே கடந்த சில நாட்களாகப் பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

கடந்த செப்டம்பர் மாதம் இரு தரப்பு மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டு, பிளஸ்-1 மாணவர் ஒருவர் காயம் அடைந்தார். இதுகுறித்து இரு தரப்புப் பெற்றோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி எச்சரித்திருந்தனர். இந்தச் சூழலில், கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி மாலை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டுப் பள்ளிக்கு வெளியே வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த மாணவர் கவியரசனை, பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் அருகே வழிமறித்த பிளஸ்-1 மாணவர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலின் போது, கவியரசனை பிளஸ்-1 மாணவர்கள் மரக்கட்டையால் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

தலையில் ரத்தக் கசிவுடன் படுகாயம் அடைந்த கவியரசன், முதலில் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இறுதியாகத் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி மானவி தற்கொலை

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட பிளஸ்-1 மாணவர்கள் 15 பேரை ஏற்கனவே கைது செய்து, தஞ்சையில் உள்ள இளம் சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!