ஷாக்.. நகைக்கடை பூட்டை உடைத்து பயங்கர கொள்ளை.. 50 கிலோ வெள்ளி பொருட்களை திருடிய மர்ம நபர்!

 
கணேசன்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே மணக்குடி கடைத்தெருவில் கணேசன் என்பவர் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு நகைக்கடையை பூட்டிவிட்டு சென்ற கணேசன் இன்று காலை கடையை திறக்க வந்தார். கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கடையின் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது, கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ​​ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 6 சவரன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கணேசன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தலைஞாயிறு போலீஸார், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலதிபர் வீட்டில் 850 சவரன் தங்க நகைகள் கொள்ளை!!புதுக்கோட்டையில் பரபரப்பு!

தங்கம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், கைரேகை உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்து தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web