அதிர்ச்சி... பள்ளி மாணவர்களுக்கு மெத்தபெட்டமைன், கஞ்சா விற்பனை... 3 பேர் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா, மெத்தபெட்டமைன் விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம், குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் ஏட்டு வசந்த் ஆகியோர் நேற்று குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பாலப்பள்ளம் பகுதியில் ஒரு பள்ளி அருகே சென்ற போது சந்தேகத்திற்கிடமாக 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினர். ஆனால் போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். இதில் ஒருவர் தப்பிஓடி விட்டார். பின்னர் போலீசார் பிடிபட்டவர்களின் மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது, சிறு பொட்டலங்களில் 75 கிராம் கஞ்சா, 2.5 கிராம் மெத்த பெட்டமைன் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருளை விற்க முயன்றது அம்பலமானது. மேலும் பிடிபட்டவர்கள் கருங்கல் அருகே மங்கலக்குன்றுவை சேர்ந்த ஷாஜி (22), பாலப்பள்ளம் கண்டு கொண்டான் மாணிக்கத்துவிளையை சேர்ந்த மெர்லின் அனிஷ் (24), வாணியக்குடி சலேட் நகரை சேர்ந்த வின்செல் நிஜோலின் (23) என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரை கைது செய்ததோடு 3 மோட்டார் சைக்கிள்கள், போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய சகாய அஜிஸை (22) தேடி வருகின்றனர். பிறகு கைது செய்யப்பட்ட 3 பேரையும் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு கஞ்சா, மெத்தபெட்டமைன் போதைப்பொருளை சப்ளை செய்தது யார்? என்பது குறித்து இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!