அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து சிதறி 6 பேர் பலி.. பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

 
ஹூப்பள்ளி விபத்து

சபரிமலை யாத்திரை சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த துயர சம்பவமாக, பாத யாத்திரையின் போது இரவு தங்கியிருந்த இடத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து பரிதாபமாக 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி மாவட்டத்தில் சாய் நகர் பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில், சபரிமலைக்கு பாதயாத்திரை புறப்பட்டு சென்ற ஐயப்ப பக்தர்கள் இரவு கோவில் அறையில் தங்கியுள்ளனர். பக்தர்கள் இரவு கோவிலில் தூங்கிக் கொண்டிருந்த போது, ​​அங்கிருந்த சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், அங்கு தூங்கிக்கொண்டிருந்த 9 ஐயப்ப பக்தர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு படையினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனளிக்காமல் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்தவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்தில் சிக்கிய 12 வயது சிறுவன் குணமடைந்து தனி அறையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் தங்கியிருந்த வீட்டில் சமையல் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web