அதிர்ச்சி.. வீட்டு வளாகத்தில் சடலமாக கிடந்த உதவி ஆய்வாளர்.. போலீசார் தீவிர விசாரணை!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் அன்பழகன் (52). இவரது குடும்பத்தினர் பவானி காவலர் வீட்டில் வசித்து வருகின்றனர். இவர் கடந்த 15 நாட்களாக வேலைக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை, மூலியனூரில் அன்பழகன் வீட்டின் முன்புறம் உள்ள வளாகத்தில், இருசக்கர வாகனத்தில் ஒருவர் தவறி விழுந்து இறந்து கிடப்பதாக, அம்மாபேட்டை போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்தவர் சிறப்பு உதவி ஆய்வாளர் அன்பழகன் என்பது தெரியவந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்த அவர் இறந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அம்மாபேட்டை போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!