அதிர்ச்சி.. திடீரென பள்ளிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய மர்ம ஆசாமி.. 7 வயது சிறுமி பலி!
குரோஷியாவின் தலைநகரான ஜாக்ரெப் அருகே உள்ள பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த இளைஞன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது தொடர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இந்த கத்திக்குத்து சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அலறியடித்து ஓடுவதை வீடியோவில் காணலாம். சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியர் மற்றும் 5 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!