அதிர்ச்சி... ஏஐ மூலம் போலீசாரை ஏமாற்ற முயன்ற இளம்பெண்!

 
ஏஐ இளம்பெண்

தொழில்நுட்பத்தின் வருகையால் உண்மைக்கும் பொய்க்கும் இடையேயான வேறுபாடு குறைந்து வரும் நிலையில், அமெரிக்காவில் ஓர் இளம்பெண், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களைப் போலீசாரிடம் ஆதாரமாகக் காட்டி ஏமாற்ற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உல்லாசம் சொகுசு ஹோட்டல் பாலியல் பலாத்காரம் இன்ஸ்டாகிராம் பாலியல் பலாத்காரம் இளம்பெண் கல்லூரி மாணவி

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஷினால்ட் (32) என்ற இளம்பெண், தனது வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு ஒருவர் உள்ளே வந்து தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குற்றத்திற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்காத நிலையில், ஷினால்ட் காட்டிய ஆதாரப் புகைப்படங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

ஏஐ மைக்ரோசாப்ட்

போலீசாரின் தீவிர விசாரணையில், அவர் அளித்த ஆதாரப் புகைப்படங்கள் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், மன உளைச்சல் காரணமாக மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே தான் இவ்வாறு செய்ததாக ஷினால்ட் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அவரிடம் கண்டிப்புடன் தெரிவித்து போலீசார் புறப்பட்டுச் சென்றனர். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகரித்துள்ளதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணமாகும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!