அதிர்ச்சி... தூங்கி வழிந்த ஓட்டுநர்... ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து... ஒருவர் பலி; 35 பேர் படுகாயம்!
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட ஆம்னி பேருந்து ஒன்று நாகர்கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தது. இன்று ஜனவரி 8ம் தேதி புதன்கிழமை காலை இந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பேருந்தில் 37 பேர் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில், “நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்து இன்று காலை பாளையங்கோட்டை தனியார் பாலிடெக்னிக் அருகே வரும்போது திடீரென நிலை தடுமாறி தலைகீழாகக் கவிழ்ந்தது.
இது குறித்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படை வீரர்கள், படுகாயம் அடைந்த 35 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பேருந்தில் பயணம் செய்த நெல்லை மாவட்டம் கூட்டப்புளி லெவிஞ்சிபுரம் பெரிய தெருவில் வசித்து வரும் 64 வயதுடைய பிரிஸ்கோ என்பவர் பலியானார். இந்நிலையில், பேருந்தின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் திடீரென தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!