அதிர்ச்சி ஆய்வறிக்கை.. விரைவில் அழியப்போகும் கடல்வாழ் உயிரினங்கள்!

 
கடல்வாழ் உயிரினம்

சமீப காலமாக பல்வேறு காரணங்களால் உலகம் பருவநிலை மாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், எதிர்காலத்தில் தண்ணீரில் வாழ முடியாத அபாயம் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. உலகின் 75% கடல்களால் சூழப்பட்டிருப்பதால், கடல்கள் பல உயிரினங்களின் தாயகமாக உள்ளன. பூமியில் பெரும்பாலும் கடல் உள்ளது, ஆனால் சுத்தமான நீர் மிகக் குறைவு. நன்னீராக இருந்தாலும் சரி, கடல் நீராக இருந்தாலும் சரி, உயிரினங்களுக்கு ஆக்ஸிஜன் முக்கியமானது. நீரில் வாழும் உயிரினங்கள் செவுள்கள் போன்ற உறுப்புகள் மூலம் நீரில் உள்ள ஆக்ஸிஜனை சுவாசிப்பதன் மூலம் உயிர்வாழ்கின்றன.

ஆனால் சமீபகாலமாக நீர்நிலைகளில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது இப்படியே தொடர்ந்தால் நீர்வாழ் உயிரினங்களுக்கு சரியான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் முற்றிலும் இறக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.மேலும், வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன் பெரும்பாலும் கடல்களில் இருந்து பெறப்படுவதாகவும், இது மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா