அதிர்ச்சி... தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 இளம்பெண்கள் மாயம்... கஞ்சா புழக்கம் அதிகரிப்பு... கதறும் மக்கள்!

 
தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து 3 இளம்பெண்கள் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் சிவரஞ்சனி (21). இவர் கடந்த 24ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சிவரஞ்சனி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் சிவரஞ்சனியைத் தேடிப் பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இது குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி

இதுபோல், தூத்துக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் மனைவி அபர்ணா (33). இவர் கடந்த 24ம் தேதி வீட்டு விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் அவரது கணவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகள் பவித்ரா (22), இவர் கடந்த 25ம் தேதி காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருச்சியில் காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது!

தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இப்படி அடுத்தடுத்து 3 இளம்பெண்கள் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 3 பேருக்கும் வீட்டில் எந்த பிரச்சனைகளும் இருந்ததாகவோ, கோபித்துக் கொண்டோ, சண்டையிட்டுக் கொண்டே கிளம்பியதாகவோ, மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவோ தகவல்கள் இல்லை. சமீபமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், இளம்பெண்கள் காணாமல் போன சம்பவம் கவலையடைய செய்துள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web