அதிர்ச்சி... டி.ராஜேந்தர் பட ஹீரோ... பிரபல நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார்!

 
கங்கா

தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள பிரபல நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63.

இவர் 1983-ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற உயிருள்ள வரை உஷா என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் கரையைத் தொடாத அலைகள், விசுவின் இயக்கத்தில் வெளியான மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

பல படங்களில் இரண்டாவது ஹீரோ வேடத்தில் நடித்துள்ள இவர், தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். நடிகர் கங்கா தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் கங்கா உயிரிழந்தார். நடிகர் கங்கா காலமான செய்தியை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் கங்காவின் இழப்பு திரையுலகை சேர்ந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பலரும் கங்காவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்குகள், அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web