அதிர்ச்சி.. நேருக்கு நேர் மோதிக்கொண்ட லாரி - கார்.. பனியன் கம்பெனி நிறுவனர் பரிதாபமாக பலியான சோகம்!
அவிநாசி அருகே மங்கலம் சாலையில் லாரி மீது கார் மோதியதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரண்டு குழந்தைகள் பலத்த காயம் அடைந்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள தேவம்பாளையத்தைச் சேர்ந்த சங்கர் (40). இவர் பனியன் கம்பெனி நிறுவனர். இந்நிலையில், சங்கர் வஞ்சிபாளையத்தில் இருந்து அவிநாசிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அவிநாசி-மங்கலம் சாலையில் வெங்கமேடு அருகே சென்றபோது, அவிநாசியில் இருந்து மங்கலம் நோக்கி வந்த லாரி மீது கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரியை திருநெல்வேலியை சேர்ந்த ரோஸ் பாண்டியன் (43) என்பவர் ஓட்டி வந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த இரண்டு குழந்தைகளும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!