அதிர்ச்சி! ஒலிம்பிக் வீராங்கனைகளுடன் டேட்டிங் செய்ய அப்டேட்! வைரலாகும் வீடியோ!

 
அதிர்ச்சி! ஒலிம்பிக் வீராங்கனைகளுடன் டேட்டிங் செய்ய அப்டேட்! வைரலாகும் வீடியோ!


கொரோனா பரவல் காரணமாக சென்ற ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் தற்போது தொடங்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. வீரர்களுக்கு தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீரர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை ஒலிம்பிக் நிர்வாகம் விதித்துள்ளது. அந்த வகையில் போட்டியில் பங்கேற்க உள்ள வீராங்கனைகளை எப்படி டேட் செய்வது என்று டிக்டாக் பிரபலம் ரீத் கன்வர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் டின்டர் டேட்டிங் ஆப்பில் பணம் செலுத்தி டின்டர் பிளஸை பயன்படுத்தி வருகிறார். அதில் அவர் தனது லோக்கேஷனாக டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் வில்லேஜை மாற்றியுள்ளார். இதனால் அவர் ஒலிம்பிக் வீராங்கனைகளை டேட் செய்ய முடியும் என கூறியுள்ளார்.

அவர் அவ்வாறு மாற்றுவதை வீடியோவாக ரெக்கார்டு செய்து அதை தனது டிக்டாக்கில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.
இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டதால் இந்தியாவில் உள்ள யாரும் இதை பார்க்க முடியாது. ஆனால் இந்த டிக்டாக் வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது.


இந்த வீடியோவில் அவர் சில ஒலிம்பிக் வீராங்கனையை ஸ்வைப் ரைட் செய்துள்ளார். இந்த வீடியோவிற்கு டின்டர் நிறுவனமும் பதிலளித்துள்ளது. அதன் படி “நீங்கள் ஒலிம்பிக்கில் இல்லை. ஆனால் கேமில் வெற்றி பெறுகிறீர்கள்” என குறிப்பிட்டுள்ளது.

From around the web