சுற்றுலா சென்றபோது அதிர்ச்சி.. சிறிய ரக விமானம் கடலில் விழுந்து கோர விபத்து.. 3பேர் பலியான சோகம்!

 
ஆஸ்திரேலியா விமான விபத்து

ஆஸ்திரேலியாவின் மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் சிறிய ரக சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் மூன்று வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் Rottnest என்ற சுற்றுலா தீவு உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சிறிய விமானங்களில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று (ஜன.07) மதியம் மாநில தலைநகர் பெர்த் திரும்புவதற்காக புறப்பட்ட செஸ்னா 208 கேரவன் என்ற சிறிய கடல் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது.

அப்போது, ​​அதை இயக்கி வந்த உள்ளூர் விமானி மற்றும் அதில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் இருவரும் உயிரிழந்தனர். 65 வயதான சுவிஸ் பெண் ஒருவரும், 60 வயதுடைய டென்மார்க் ஆடவரும், 34 வயதுடைய உள்ளூர் விமானி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்தின் போது, ​​அவர்களுடன் விமானத்தில் பயணித்த இரண்டு ஆஸ்திரேலியர்கள் மற்றும் உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் உயிரிழந்த நபரின் மனைவி ஆகியோர் உயிர் தப்பினர். எனினும் அவர்களில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மாநிலத் தலைநகர் பெர்த்தில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். கடலில் விழுந்த விமானத்தின் பாகங்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில், நீச்சல் வீரர்கள் 26 அடி ஆழம் வரை நீந்தி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் விமானம் புறப்படும் போது பாறையில் மோதியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web