Connect with us

இந்தியா

திடீர் உத்தரவு!! கதறும் ஐடி ஊழியர்கள்!! திசை மாறிய வாழ்க்கை முறை!!

Published

on


கொரோனா ஊரடங்கு எல்லா துறைகளையுமே புரட்டி போட்டிருந்தாலும், ஐ.டி. ஊழியர்கள் கொஞ்சம் தெம்பாகவே இருந்தனர். அவர்களது சம்பளத்தில் துண்டு விழுந்தது நிஜம் என்றாலும், கொரோனா தொற்று பரவ துவங்கிய ஆரம்ப நாட்களிலேயே பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு 2 வருட காலத்திற்கு வொர்க் ஃப்ரம் ஹோம் என்று அனுமதி கொடுத்து தான் நிறுவனங்களை நடத்த ஆரம்பித்தன.

வெளியூர், வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள், மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், மாத சம்பளத்தில் செலவு என்று பெரிதாக எதுவும் இல்லாமல் வழக்கமான பட்ஜெட்டில் சம்பளத்தின் பாதி மிச்சமானது அவர்களது இத்தனை ஆண்டு கால ஊதாரித்தனமான செலவுகளை கண் முன் கொண்டு வந்தது. இப்போது இதற்கு தான் வேட்டு வைத்திருக்கின்றன ஐ.டி. நிறுவனங்கள்.

உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா காரணமாக வீடுகளுக்குள் முடங்கி இருந்தது. ஒர்க் ப்ரம் ஹோம், ஆன்லைன் மூலமே பாடங்கள் என அனைவரது நடைமுறையும் மாறிப்போனது.

அந்த வகையில் முண்ணனி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் உள்பட பல ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்யும் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற நடைமுறைக்கு அனுமதி அளித்திருந்தது
ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதன் அடிப்படையில் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன


அதன்படி நவம்பர் 15 முதல் இந்தியா உட்பட உலகின் அனைத்து டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அலுவலர்கள் அனைவருமே நிச்சயம் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசிஎஸ் மட்டுமின்றி ஹெச்.சி.எல், உள்பட பல ஐடி நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா4 mins ago

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பிறந்த ’பார்டர்’.!!

ஆன்மிகம்1 hour ago

இந்த 3 ராசிக்காரர்களுக்கு யோகம் ஆரம்பம்!!

செய்திகள்3 hours ago

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

உலகம்3 hours ago

ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து!! 31 பேர் பலி!! வைரலாகும் வீடியோ !!

செய்திகள்4 hours ago

ஆதாரை டவுன்லோட் செய்ய எளிதான வழி! இனி பத்திரமா வச்சுகோங்க!!

இந்தியா5 hours ago

ஒரே பள்ளியை சேர்ந்த 107 பேருக்கு கொரோனா!!

குற்றம்5 hours ago

போலீஸ் லத்தியால் தாக்கியதில் பெட்டிக்கடைக்காரர் பரிதாப பலி..!!

சினிமா5 hours ago

கொண்டாட்டத்தில் நக்‌ஷத்திரா! விரைவில் டும் டும் டும்…!

இந்தியா6 hours ago

பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை..!!

அரசியல்6 hours ago

இந்தியா – ரஷ்யா ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

செய்திகள்2 months ago

அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

ஈரோடு4 weeks ago

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

கள்ளக்குறிச்சி2 months ago

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

காஞ்சிபுரம்4 weeks ago

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கன்னியாகுமரி2 months ago

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !அதிரடி அறிவிப்பு!

சிவகங்கை1 month ago

அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

செய்திகள்2 months ago

பிக் நியூஸ்! தமிழகத்தில் 11 நாட்கள் தொடர் விடுமுறை!

சினிமா2 months ago

கவிஞர் பிறைசூடன் கடந்து வந்த பாதை!

செய்திகள்1 month ago

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

இந்தியா3 weeks ago

ரூ1000 வெள்ள நிவாரணத் தொகை!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

Trending