தமிழகத்தை உலுக்கிய பகீர் சம்பவம்.. அண்ணா பல்கலைக்கழக மாணவி கூட்டு பலாத்காரம்.. ஒருவர் கைது!
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவியும், மாணவனும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத இருவர் மாணவனை தாக்கி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
காதலன் அளித்த புகாரின் பேரில் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், பல்கலைக்கழகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதனை கண்டித்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!