நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. அரை நிர்வாணமாக சண்டையிட்டு கொண்ட ஆண்-பெண்!

சேலம் மாவட்டம், பழைய எடப்பாடியை அடுத்த எரி ரோடு பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய மணி என்பவர் எடப்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். ஏடிஎம் பாதுகாப்பு ஊழியர் மணி நேற்று இரவு, எடப்பாடி-சேலம் பிரதான சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள கடைத் தெருவில், அரை டவுசர் மட்டுமே அணிந்திருந்த மணி ஒரு பெண்ணை துரத்திச் சென்றார். ஒரு கட்டத்தில், அந்தப் பெண்ணை துரத்தி பிடித்து, தனது பேன்ட் மற்றும் சட்டையை தருமாறு கெஞ்சினார்.
ஆனால் அந்தப் பெண் அவற்றைக் கொடுக்க மறுத்ததால், காவலாளி மணி திடீரென அந்தப் பெண்ணின் சேலையை இழுத்தார். அரை நிர்வாணமாக இருவரும் தொடர்ந்து சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி கட்டிப்போட்டு விசாரித்தனர். அந்தப் பெண் எடப்பாடி-ஜலகண்டபுரம் சாலையில் உள்ள மட்டாஸ்பத்திரி பேருந்து நிறுத்தப் பகுதியைச் சேர்ந்த சத்யா (40) என்பது தெரியவந்தது. அவர் சொந்த வேலையாக எடப்பாடிக்கு வந்திருந்தார்.
அப்போது, ஏடிஎம் காவலாளி மணி தன்னிடமிருந்து 2 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றதாகக் கூறினார். மேலும், அருகில் இருந்தவர்களிடம் அதைத் திருப்பித் தருமாறும் கூறினார். ஆனால், ஏடிஎம் காவலாளி மணி அங்கிருந்தவர்களிடம், அந்தப் பெண் தன்னிடமிருந்து பணத்தைப் பறித்துவிட்டதாகவும், அதைத் கேட்டப்போது, அவள் தனது ஆடைகளைக் கழற்றிவிட்டதாகவும் சத்தமிட்டார். இருவரும் அரைகுறை ஆடையுடன், அந்தப் பகுதியில் நீண்ட நேரம் சண்டையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் காட்சியைக் கண்ட பொதுமக்கள் கோபமடைந்தனர். சேலம் எடப்பாடியில் நடந்த இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!