கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. சாமி கும்பிட்ட படியே தற்கொலைக்கு முயன்ற கட்டிட தொழிலாளி!

 
மனோகரன்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பாண்டியன் தெருவில் வசிப்பவர் மனோகரன் (48). அவர் ஒரு கட்டுமானப் பணியாளராக உள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று மாலை, குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு கெங்கை அம்மன் கோயிலுக்குள் சென்ற மனோகரன், கோயில் வளாகத்தில் முழங்காலில் கற்பூரம் ஏற்றி, தூரத்தில் இருந்து அம்மனை வழிபட்டார்.

சுவாமி கும்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர் தற்கொலைக்கு முயன்றார். அப்போது, ​​கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அலறியடித்து அடித்துக் கொண்டு ஓடினர். உடனடியாக பக்தர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த மனோகரனை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் உடுகம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மனோகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்ளிட்ட போலீசார் கெங்கை அம்மன் கோவிலுக்கு சென்று மனோகரன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மனோகரன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. விசாரணையில், கடந்த சில நாட்களாக மனோகரன் வீட்டில் தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தார். தன்னை யாரோ அழைப்பதாக அவர் கூறியிருந்தார். அவரும் பதட்டமாக இருந்தார். எதற்காக கோவிலுக்கு சென்று தற்கொலைக்கு முயன்றார் என தெரியவில்லை.

இதற்கிடையில், சம்பவம் குறித்து வெளியான சிசிடிவி காட்சிகளில் மனோகரன் தற்கொலைக்கு முயற்சிப்பதும், அவரை சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்ப்பதும் பார்ப்பவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. குடியாத்தம் கங்கை அம்மன் கோவில் வளாகத்தில் கட்டிட கொத்தனார் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web