அதிர்ச்சி ரிப்போர்ட்!! இப்படி தூங்கினால் சீக்கிரம் வயசாகிவிடுமாம்! சரியான முறை எது?!

 
இளம்பெண் தூக்கம் மயக்கம் படுக்கையறை

தினமும் நாம் சரியாக  தூங்கவில்லை என்றால் அது அன்றைய நாளில் மோசமான பல பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். மன அழுத்தத்துக்கு வழிவகுத்துவிடும். மனிதர்கள்  தவறான நிலையில் தூங்கும்போது அது பல்வேறு உடல்நிலை பிரச்சினைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் முன்னெச்சரிக்கை செய்கின்றனர்.

பெரும்பாலும் பலர் குப்புறபடுத்து தூங்குவதையே  தங்களின் சுகமான தூக்க நிலை என கருதுகின்றனர்.  இதுவே பல உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இவ்வாறு குப்புற படுத்து தூங்குவதினால் முகத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடை செய்யப்பட்டு சருமம் விரைவில் சுருக்கம் அடைந்து வயதான தோற்றத்தை உண்டாக்கிவிடும் என கூறுகின்றனர்.

தூக்கம்

முதுகெலும்பு அருகில் இருக்கும் ரத்த குழாய்கள் இறுக்கமாகிவிடும்.  மேலும் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து ஆக்சிஜன் சப்ளை தடை செய்யப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இது போல் தூங்குவதால் ரத்தக்குழாய்களில் அடைப்பு கூட ஏற்படலாம்  என்கின்றனர்  மருத்துவர்கள்.

குப்புறப்படுத்து தூங்குவதனால் மார்பு பகுதி இறுகி உடலுக்கு சரியான ஆக்ஸிஜன் கிடைக்காது. இவ்வாறு தொடர்ந்து தூங்கினால்  நெஞ்சு வலி கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வயிற்றுப் பகுதியில் அதிகமாக அழுத்தம் கொடுப்பதால் செரிமான கோளாறு, அல்சர், வாயு தொந்தரவு இவைகளும் ஏற்படலாம்.  அத்துடன் கழுத்து மற்றும் தோள்பட்டை வலியையும் உண்டாக்கும். மேலும், தண்டுவட பாதிப்பை கூட ஏற்படுத்துகிறது அது மட்டுமல்லாமல் எலும்பு அடர்த்தி குறைய துவங்கும். இதய கோளாறு உள்ளவர்கள் கண்டிப்பாக குப்புறப்படுத்து தூங்கவே கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தூக்கம் உறக்கம் மயக்கம் படுக்கையறை பெட் இளம்பெண்

நேராகவோ அல்லது இடது புறமாகவோ படுத்து தூங்குவதே சிறந்தது  குறட்டை விடும் பிரச்சனை உள்ளவர்கள் நேராக படுக்காமல் ஒரு புறமாக சாய்ந்து படுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  கர்ப்பிணிகள் இடது புறமாக படுத்து உறங்குவதே குழந்தையின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது . முதுகு வலி, கை கால் வலி இருப்பவர்கள் குப்புறப்படுத்து 15 நிமிடங்கள் மட்டும் தூங்கலாம் எனவும் இப்படி செய்வதால்  முதுகு வலி குறைந்துவிடும். ஆனால், இந்த நிலையிலேயே தொடர்ந்து தூங்குவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web