அதிர்ச்சி வீடியோ.. நாடாளுமன்றத்தின் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றவர் கவலைக்கிடம்!

 
நாடாளுமன்ற தற்கொலை முயற்சி

இன்று டிசம்பர் 25ம் தேதி நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே திடீரென இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வெளியான தகவல்களின்படி இந்த சம்பவம் நடந்த உடனேயே அவர் டெல்லி ஆர்.எம்.எல். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் அவரது நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

போலீசாரின் விசாரணையில் சம்பவ இடத்தில் இருந்து பெட்ரோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையினருடன் தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளனர்.

தீக்குளிப்பு

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் ஜிதேந்திரா என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web