அதிர்ச்சி வீடியோ.. மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் நிர்வாண கோலத்தில் நுழைந்த ஆண்!

 
 நிர்வாண ஆண்

மும்பை சிஎஸ்எம்டி-கல்யாண் விரைவு ஏசி லோக்கல் ரயிலில் பெண்கள் பெட்டியில் நிர்வாண நிலையில் ஆண் ஒருவர் காணப்பட்டதைக் கண்டு பெண்கள் பயணிகளை பீதியில் ஆழ்த்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் 32 வினாடிகள் கொண்ட வீடியோ, பயணிகள் குழுவில் பயணி லதா ஆர்கேட் என்பவர் பகிர்ந்துள்ளார், இது சமூக ஊடகங்களில் வைரலாகி, பயணிகளின் பாதுகாப்பு குறித்த  கவலைகளை எழுப்புகிறது.


மாலை 4:11 மணிக்கு சிஎஸ்எம்டி - கல்யாண் ஏசி உள்ளூர் ரயிலில் இந்த சம்பவம் நடந்தது. ரயில் காட்கோபர் நிலையத்தை அடைந்தபோது, ​​​​பெண்கள் பெட்டியின் கதவு அருகே அந்த நபர் நிற்பதைக் கண்டு பெண் பயணிகள் வேதனையடைந்தனர்.  நிர்வாண நிலையில் ஆண் ஒருவர் இருந்த தகவலை அறிந்த பக்கத்து பெட்டியில் இருந்த  டிக்கெட் பரிசோதகர் (TC) பெண்கள் பெட்டிக்குள் நுழைந்து, அடுத்த ஸ்டேஷனில் அந்த நபரை இறக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web