இளம்பெண்ணை அரைநிர்வாணப்படுத்தி பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ!

குஜராத் மாநிலத்தில் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி மோட்டார் சைக்கிளில் கட்டி, சாலையில் இழுத்துச் சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. இது குறித்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் தாஹோட் மாவட்டத்தில் 30 வயதுடைய பழங்குடியின இளம்பெண் ஒருவர் திருமணத்திற்குப் புறம்பான உறவு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தால்மிசல் கிராமத்தின் வழியாக ஆடைகளை அவிழ்த்து அரைநிர்வாணப்படுத்தி, மோட்டார் சைக்கிளில் கட்டி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
મહિલાના વસ્ત્રો કાઢીને બાઇક પાછળ સાંકળથી બાંધીને ઢસડી, દોડાવી, મારી!!!
— Sagar Patoliya (@kathiyawadiii) January 31, 2025
દાહોદ | અમુક ઘટનાઓને સમાજને કલંકિત કરનારી ઘટનાઓથી પણ વિશેષ ઉપાધિ આપવી પડે. એવું જ કઈક થયુ છે ગુજરાતના દાહોદમાં..
35 વર્ષીય પરિણીત મહિલા પર સ્થાનિકોએ અમાનવીય અત્યાચાર ગુજાર્યો છે. મહિલા પર ગામના એક યુવક… pic.twitter.com/ak1ffS1Aag
கடந்த ஜனவரி 28ம் தேதியன்று நடந்த இந்த கொடூரமான சம்பவத்திற்கு இளம்பெண்ணின் மாமனார் மற்றும் அவரது கணவரின் சகோதரர் தலைமை தாங்கி உள்ளனர்.இது குறித்த வீடியோ வைரலான நிலையில், தான் கொடூரமாக தாக்கப்பட்டதால், அந்த பெண் கருணை கோருவதை வீடியோ வெளிப்படுத்துகிறது. மாமனார் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த இளம்பெண்ணை அதன் பின்னர் தகவலறிந்து போலீசார் மீட்டு, 4 பெண்கள் மற்றும் 4 மைனர்கள் உட்பட 12 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக 3 சந்தேக நபர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடத்தல், தவறான சிறைச்சாலை மற்றும் மூர்க்கத்தனமான அடக்கம் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். இந்த வீடியோவை படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்பியவர்கள் மீது ஐடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!