அதிர்ச்சி வீடியோ... நடுரோட்டில் மாணவியை மிகக் கடுமையாகத் தாக்கிய ஆசிரியர்!
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. புனித ஜான் பாஸ்கோ மகளிர் மேல்நிலைப் பள்ளியின் சார்பில், பாகலூர் சாலையில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான யோகி வேமண்ணா பள்ளியில், அக்டோபர் 21 , 23 தேதிகளில் நடைபெற்ற மாவட்ட வருவாய் அளவிலான வாலிபால் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பள்ளி மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய ஆசிரியர் #Hosut | #Students | #Teacher | #VelichamTV pic.twitter.com/Z7zNd0OyC2
— Velicham TV (@velichamtvtamil) October 28, 2024
இந்நிலையில் அந்தப் போட்டி நடைபெற்ற போது அக்டோபர் 23ம் தேதி ஜான் பாஸ்கோ பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் கருப்பையா மற்றும் பயிற்சியாளர் தியாகராஜன் இருவரும் சேர்ந்து ஒரு பள்ளி மாணவி மீது கடுமையாக தாக்குதல் நடத்துகின்றனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியாகி வைரலானதை அடுத்து மாணவிகளை அடித்த ஆசிரியர்களிடம் மாவட்ட கல்வித்துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!