அதிர்ச்சி வீடியோ... பெண் போலீசாரின் கன்னத்தில் அறைந்த இளைஞன்.. அடுத்தடுத்த பரபரப்பு!

 
பெண் போலீசார்

மத்திய பிரதேச மாநிலத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, பொதுமக்களைக் கலைந்து போக சொன்ன பெண் போலீசார் ஒருவர், அவர்களில் ஒரு இளைஞனை அடித்து தள்ளிய போது ஆவேசத்தில் பதிலுக்கு அந்த இளைஞரும் பெண் போலீசாரின் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது. அடுத்தடுத்து போராட்டக்காரர்கள் பெண் போலீசாரைத் தாக்குகின்றனர். 

அந்த வீடியோவில், பெண் போலீஸ் அதிகாரி, அனுமேஹா குப்தா, பொதுமக்களின் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து நெரிசலை சரிசெய்வதற்காக கூட்டத்தினரிடம் பேசுவது பதிவாகி இருக்கிறது. 


இதற்கு நடுவே ஒரு இளைஞர் பெண் போலீசாரிடம் ஏதோ சொல்கிறார். அவர் பதிலுக்கு அவனை அறைந்தார். இது கூட்டத்தினரைக் கோபப்படுத்தியது. மக்கள் "ஹத் நஹி மேடம்" என்று கூறுகின்றனர். அதன் பின்னர் அடிவாங்கிய இளைஞன் அவரைக் கன்னத்தில் அறைகிறான்.  மேலும் கூட்டத்தில் இருந்து ஒருவர் திடீரென்று பெண் போலீசாரை அறைந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'என்டிடிவி இந்தியா' ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது. எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலையை மறித்த கிராம மக்கள் கூட்டத்தில் பெண் போலீசார் உரையாற்றுவதை வீடியோ காட்டுகிறது. மத்தியப் பிரதேசத்தின் தர்குன்வா கிராமத்தில் 50 வயதான குர்கா லோதி என்ற நபரை அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் ஒன்று மோதி பலியாக்கியதில் பயந்து போய் காரின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடினார். அதன் பின்னர் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நெடுஞ்சாலை மறியலில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பெண் போலீசார்

இந்த தகவல் கிடைத்ததும் பெண் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்து நெரிசலை அகற்றினர். போராட்டத்தின் போது, ​​பெண் போலீசார் போராட்டக்காரர்களில் ஒருவரை கடுமையாக அறைந்தார். பழிவாங்கும் விதமாக, கூட்டத்தினர் அவளைத் தாக்கினர். கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் போலீசாரின் முதுகில் குத்துகின்றனர். 

இந்த வைரலான வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, பல பயனர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு பயனர், “எந்த தவறும் இல்லாமல் போலீசார் ஏன் முதலில் இளைஞரை அறைந்தார்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார். எது எப்படியோ? வன்முறையை நீங்கள் கையில் எடுத்திருக்க கூடாது. போலீசாரை அறைவது தவறு என்றும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

இதனால் போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை நடத்தி, நிலைமையை அமைதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web