அதிர்ச்சி வீடியோ.. இரு லாரிகளுக்கு இடையே சிக்கிய கார்.. கோர விபத்தில் 8 பேர் பலி, 20 பேர் படுகாயம்!
மகாராஷ்டிரா மாநிலம், பூனே நவலே பாலம் அருகே நேற்று மாலை நடந்த பயங்கர சாலைவிபத்தில், இரண்டு லாரிகளுக்கிடையே சிக்கிய கார் நொறுங்கி 8 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருந்த இரண்டு சரக்கு லாரிகள் மோதிய போது, நடுவில் சென்று கொண்டிருந்த கார் இரண்டு லாரிகளுக்கும் இடையே சிக்கி நசுங்கியது. இந்த சம்பவ இடத்தில் எடுத்த வீடியோக்களில், லாரிகளில் ஒன்றில் தீப்பிடித்து எரிந்த காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன. பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், நெடுஞ்சாலையின் இருபுறமும் பல கிலோமீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
#WATCH | Maharashtra | At least six people were killed after a container truck lost control and rammed into multiple vehicles near Navale Bridge on the Pune-Bengaluru Highway. Following the collision, 2–3 heavy vehicles caught fire. Rescue operations are underway: DCP Sambhaji… pic.twitter.com/l7W6qFuQLK
— ANI (@ANI) November 13, 2025
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்பு குழுவினரும் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பலர் படுகாயங்களால் திடீர் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து, தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட எல்பிஜி சிலிண்டர்கள் ஏற்றிக் கொண்டுசென்ற லாரி தடம் புரண்டதால் ஏற்பட்ட பெரும் தீவிபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அப்போது சாலையில் ஓடிய நாய் ஒன்றை தவிர்க்க முயன்ற லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
