அதிர்ச்சி வீடியோ... நடிகை த்ரிஷாவைக் கட்டிப்பிடித்து உதட்டோடு முத்தம் கொடுத்த இளைஞர்... ஏஐ அட்ராசிட்டி!
ஏற்கனவே நடிகைகள் ராஷ்மிகா, ஹன்சிகா, ஜான்வி போன்றவர்களின் ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தற்போது பிரபல நட்சத்திரங்களுடன் இணைந்து டான்ஸ் ஆடுவது, கட்டிப்பிடிப்பது, தோளில் கை போடுவது போன்ற வீடியோக்களை ரசிகர்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இது Trisha க்கு தெரியாம பாத்துக்கோ da பாவம் இப்டி வந்து சந்துல மாட்டிகிட்ட pic.twitter.com/tZpX20DPCU
— நீலன் (@neelan_offl) September 22, 2024
இந்நிலையில், முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷாவுக்கு இளைஞர் ஒருவர் லிப் லாக் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவின் எடிட்டிங் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏஐ டெக்னாலஜி இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ? என்று அதிர்ச்சியுடன் பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம் இதுபோன்ற வீடியோக்களை உருவாக்குபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோவின் உருவாக்கம், செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு குறித்த கவலைகளை எழுப்பி வருகிறது. .
ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோ நடிகை த்ரிஷாவின் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டீப்ஃபேக்குகளை எதிர்த்துப் போராடுவதற்கான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று பலரும் கூறியுள்ளனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!