அதிர்ச்சி வீடியோ... நடுரோட்டில் இளம்பெண்ணை தரதரவென இழுத்து சென்ற இளைஞர்!

 
வீடியோ

நடுரோட்டில் இளம்பெண் ஒருவரை செல்போன் பறிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதைபதைக்க செய்கிறது.

அந்த வீடியோவில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இளம்பெண் ஒருவர் செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வழியே வேகமாக வந்த இளைஞர்  ஒருவர், இளம்பெண்ணிடம் இருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்கிறார். தனது செல்போனை பறிகொடுக்காமல் இளம்பெண் விடாமல், செல்போனை இறுக்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்.


இதனால் செல்போனுடன் சேர்த்து இளம்பெண்ணையும் இளைஞர் மோட்டார் சைக்கிள் ஓட்டியபடியே இழுத்து செல்கிறார். ஒரு கட்டத்தில் தரதரவென நடுரோட்டில் தார் சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணை அந்த இளைஞர் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி செல்கிறார்.

செல்போன் பறிப்பு

அதன் பிறகு அங்கிருந்த பொதுமக்கள், காயமடைந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web