பள்ளி மாணவி உட்பட 10 பேர் மீது துப்பாக்கி சூடு.. பாலியல் துன்புறுத்தல் விபரீதம்!!

 
மருத்துவமனை

உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் பிந்தோ கிராமத்தில் வசித்து வருபவர் கல்லூரி மாணவி.  பி.ஏ. படித்து வரும் இவர் தினமும் கல்லூரிக்கு நடந்தே செல்வது  வழக்கம்.  இந்நிலையில், ஜிதேந்திர திவாரி என்பவர் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்து வந்தார்.   கல்லூரிக்கு சென்ற அந்த மாணவியை அந்த நபர் விடாமல் தொந்தரவு செய்து வந்துள்ளார் .  

ஒரு கட்டத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அந்நபருக்கு மாணவி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.இந்நிலையில், திவாரி மற்றும் அவருடைய தந்தை என இருவரும் மாணவியின் வீட்டுக்கு சென்று துப்பாக்கி சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் 10 பேர் வரை காயமடைந்து உள்ளனர். அவர்கள் அருகேயுள்ள சுகாதார நல மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சைக்கு பின்னர் அவர்களின் நிலைமை முற்றிலும் சீரடைந்து உள்ளது.

பாலியல் துன்புறுத்தல்

எனினும், அவர்களில் 7 பேர் மஹோபா மாவட்ட மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து மஹோபா மாவட்ட எஸ்.பி. அபர்ணா குப்தா விடுத்த செய்திக்குறிப்பில் “ இச்சம்பவம் சம்பந்தமாக  4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை விரைவில் பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு   வருகிறது என கூறியுள்ளார். ஈவ்-டீசிங் குற்றச்சாட்டு கூறப்பட்டபோதும், வேறு ஏதேனும் பகைமை விசயங்கள் உள்ளனவா? என்றும் விசாரணை நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web