மதுபான விடுதியில் பயங்கர துப்பாக்கிச்சூடு.. 12 பேரை சுட்டுக்கொன்ற நபர் தற்கொலை!
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மாண்டெனெக்ரோவில் உள்ள சியூன்ஜே நகரில் உள்ள மதுபான விடுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் அகோ மார்டினோவிக் என்ற 45 வயது நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பப் உரிமையாளர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். அகோ மார்டினோவிக் வேறு மூன்று இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இந்த தாக்குதல்களில் மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய அகோ மார்டினோவிச்சை போலீசார் கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர். பின்னர் அகோ மார்டினோவிச் தன்னைத்தானே தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மொத்த மக்கள் தொகை 620,000 கொண்ட சிறிய நாடான மாண்டினீக்ரோவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகமாக உள்ளது. 2022 ஆம் ஆண்டில், சியோங்ஜே நகரில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!