வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு.. இருவர் பலி.. தடுக்க வந்த போலீஸ் மீதும் பாய்ந்த குண்டு!

 
இண்டியானா துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு கலாச்சாரம் சமீப காலமாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 385 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

துப்பாக்கி சூடு

இந்த சம்பவம் அமெரிக்காவின் இண்டியானாவின் எல்கார்ட் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நடந்தது. ஒரு இளைஞர் அங்குள்ள ஒரு கடைக்கு பொருட்களை வாங்குவது போல் சென்றார். பின்னர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினார். அப்போது, ​​கடைக்குள் இருந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரைப் பிடிக்க முயன்றபோது, ​​அந்த இளைஞனும் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் இரண்டு போலீசார் படுகாயமடைந்தனர். போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த இளைஞர் உயிரிழந்தார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web